‘நானே வருவேன்’ : தனுஷ் - செல்வராகவன் - யுவன் கூட்டணி.!  - Seithipunal
Seithipunal


தமிழ் திரை உலகில் புதுப்பேட்டை என்ற படத்தின் தாக்கம் பல மாற்றங்களை கொண்டு வந்தது. ஒரு ரவுடி எப்படி உருவாக்குவான், அவனது வாழ்க்கை எப்படி இருக்கும், அவனுக்கான கர்மா அவனை என்ன செய்யும் என்பதை எதார்த்தமாக காட்சி அமைத்து இருப்பார் படத்தின் இயக்குனர் செல்வராகவன். 

மேலும், தனுஷை வைத்து இவர் இயக்கிய 'மயக்கம் என்ன' படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த கூட்டணி 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளது.

இந்த படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

புதுப்பேட்டை படத்தில் இணைந்த தனுஷ் - செல்வராகவன் - யுவன் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது.

இந்த படத்திற்கு ‘நானே வருவேன்’ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nane varuvan


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal