#JUSTIN || 138 வாக்குகள் அதிகம்., சற்றுமுன் நடிகர் பாக்யராஜ் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2019 ல் நடைபெற்ற தேர்தலில் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும், நாசர் தாய்மையில் விஷால் கார்த்தி உள்ளிட்டோர் சேர்ந்து மற்றொரு அணியாகவும் போட்டியிட்டனர்.  

இந்த தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு காரணமாக வாக்கு எண்ணிக்கை 3 வருடங்கள் கழித்து இன்று காலை 8 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்து கொண்டு இருக்கிறது.

காலை 10 மணி அளவில், துணைத்தலைவர் பதவிக்கு பதிவான வாக்குகளை விட 5 வாக்குகள் கூடுதலாக இடம் பெற்றிருப்பதாக ஐசரி கணேஷ் புகார் கூறியதால், நடிகர் சங்கத் தேர்தல், துணைத் தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில், சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பாக்யராஜ், "வெற்றி, தோல்வி பற்றி கவலை இல்லை. பதிவான வாக்குகளை விட அதிக வாக்குகள் இருக்கின்றன.

கூடுதல் வாக்குகள் பதிவாகியிருக்கும் நிலையிலும், வாக்கு எண்ணிக்கையை நடத்துகிறார்கள்" என்று நடிகர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். 

சுமார் 138 தபால் வாக்குகள் அதிகமாக உள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

nadigarsangamElection ISSUE


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->