'போதை இல்லாத தமிழகம் தான் என் லட்சியம்'...! - விழிப்புணர்வு ஓட்டத்தில் பங்கேற்று முதல்வர் விஜய் கொடுத்த மாஸ் மெசேஜ்...! - Seithipunal
Seithipunal


போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக மக்களிடையே வலுவான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ‘ஸ்டார்ட் ரன்... ஸ்டாப் டிரக்ஸ்’ என்ற பெயரில் இன்று சிறப்பு விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது.

சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்வு இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.இந்த விழிப்புணர்வு ஓட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர், போதைப்பொருள் ஒழிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அவர் நேரடியாக ஓட்டத்திலும் கலந்துகொண்டார்.இந்த நிகழ்வில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, என். ஆனந்த், மரிய வில்சன், வெங்கட்ராமன், தலைமைச்செயலாளர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர்.

மேலும், விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களுடன் தோள் கொடுத்து ஓடிய முதல்-அமைச்சர் விஜய், போதைப்பொருளுக்கு எதிரான ஒற்றுமை போராட்டத்தின் அவசியத்தை வலிமையாக எடுத்துரைத்தார்.

இந்த விழிப்புணர்வு ஓட்டம் சமூகத்தில் நல்ல மாற்றத்திற்கான முக்கிய முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

My goal drug free Tamil Nadu Chief Minister Vijay mass message after participating awareness run


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->