முக்குலத்தோர் ஓட்டுகளை குறிவைத்து தேவர் பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார் - விழுப்புரம் எம்.பி ரவிக்குமார்.! - Seithipunal
Seithipunal


முக்குலத்தோர் வாக்குகளை குறிவைத்து தான் தேவர் குரு பூஜைக்கு பிரதமர் மோடி வருவதாக விழுப்புரம் எம்பி ரவிக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 28, 29, மற்றும் 30 ஆகிய 3 நாட்களில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறும். அதேபோல் இந்த வருடம் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்கு தமிழக பாஜக சார்பில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பினை ஏற்று பிரதமர் மோடி வரும் அக்டோபர் 30-ம் தேதி தேவர் குருபூஜையில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று நடைபெற்ற இடதுசாரி கட்சிகளின் சமூக நல்லிணக்க பேரணியில் பங்கேற்ற விழுப்புரம் எம்பி ரவிக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,

மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் பிளவுப்படுத்தும் சக்திகளுக்கு இடமில்லை. பிரதமர் மோடி தேவர் குருபூஜைக்கு வருகை புரிவது சாதிய ரீதியில் மக்களை பிளவுபடுத்தி அரசியல் லாபம் பார்ப்பதற்காகவே வருகிறார். 

மேலும், தேவேந்திர குல வேளாள மக்களை பட்டியல் இனத்தில் இருந்து நீக்கி சட்டம் இயற்றுவதாக கூறி நிறைவேற்றாமல் முக்குலத்தோர் ஓட்டுகளை குறிவைத்து தேவர் குரு பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், மோடி பிரதமராக 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்று தான் முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்கு வரவேண்டும் வழி தெரிந்ததா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தென் மாற்றங்களை சேர்ந்தவர்கள் பாஜகவை சேர்ந்த பிரிவினைவாதிகளை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள் என்றும் பாஜக லோக்சபா தேர்தலை குறிவைத்து செயல்படுகிறது என்றும் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MP Ravikumar speech about Modi comes to Devar guru poojai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->