எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கொடுத்த ஆதரவு கடிதம்! அதிமுகவிற்கு குவியும் ஆதரவு!  - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சிறப்பாக போட்டியிடும் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓபிஎஸ்-யை பொறுத்தவரை, இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். 

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவிற்கு தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பல கூட்டணி கட்சிகள், அமைப்புகள் ஆதரவு கரத்தை நீட்டி வருகின்றன.

தேசிய புலிகள் கட்சி , நாடார் மற்றும் அருந்ததிய அமைப்பினர், அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக, எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஈரோடு கிடக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு அம்பேத்கர் மக்கள் இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

சேலத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் ஆதரவு கடிதத்தை வழங்கி உள்ளனர்.

மேலும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு அனைத்து மக்கள் கட்சி தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அனைத்து மக்கள் அரசியல் கட்சியினர் தங்களது பார்வை ஆதரவை தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

more party support to AIADMK EPS erode east


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->