Manchester-இல் Monster-கள் ஆட்சி! திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை!– நயினார் நாகேந்திரன் அதிரடி - Seithipunal
Seithipunal


பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது ‘எக்ஸ்’ தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கடுமையாகப் பதிலடி கொடுத்துள்ளார்.அதில் அவர் தெரிவித்ததாவது,"தென்னகத்தின் Manchester எனப் போற்றப்படும் கோவையை, பெண்கள் பாதுகாப்பற்ற Monster Zone ஆக மாற்றியிருக்கிறது திமுக ஆட்சி.

தேசம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் அதிர்ச்சி அடங்குமுன், மீண்டும் கோவை இருகூரில் ஒரு பெண் கடத்தப்படும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இது தமிழக மக்களின் மனதில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

திமுக அரசின் கீழ் காவல்துறை அரசியல் அழுத்தத்தில் செயல்படுகிறது என்பது இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது என்பது அரசு கடமை, ஆனால் திமுக ஆட்சியில் அது காகிதத்தில் மட்டுமே உள்ளது.விமான நிலையம் அருகில் வன்கொடுமை, நகர சாலைகளில் கடத்தல் எனக் கோவை இன்று பயத்தின் நகரமாக மாறியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே, வாயால் நல்லாட்சி பேசிக் கொண்டு, கையில் பெண்களின் பாதுகாப்பை இழக்கும் நிலையில் எத்தனை குற்றவாளிகளை சுட்டு பிடிப்பது வரை அரசின் கடமை நிறைவேறும்.திறனற்ற நிர்வாகம் மற்றும் சீரழிந்த சட்டம் ஒழுங்கு காரணமாக பெண்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை ‘நல்லாட்சி’ எனப் போற்றுவது ஒரு தேசத்தின் துரதிர்ஷ்டமே" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Monsters rule Manchester There no safety women under DMK rule Nainar Nagendran takes action


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->