ஆசியன் உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்பில்லை...! -டிரம்பைத் தவிர்த்தாரா பிரதமர்...? - Seithipunal
Seithipunal


ஆசியா உச்சி மாநாடு மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் வரும் 26 முதல் 28ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இந்த முக்கிய மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

மேலும், பொதுவாக சர்வதேச மேடைகளில் இந்தியாவின் குரலாக எப்போதும் கலந்துகொள்வது வழக்கம் எனும் பிரதமர் நரேந்திர மோடி, இம்முறை தீபாவளி பண்டிகை காரணமாக மலேசியாவுக்கு நேரில் செல்ல முடியாத நிலையிலுள்ளார். இருப்பினும், அவர் காணொலி காட்சி (Video Conference) மூலம் உச்சி மாநாட்டில் உரையாற்றவுள்ளதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நெடிதாகும் நிலையில், டிரம்ப் தொடர்ந்து இந்தியாவை குறிவைத்து கடுமையான கருத்துக்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால், டிரம்பை நேரில் சந்திப்பதை தவிர்க்கும் நோக்கத்துடன் மோடி இந்த முறை ஆசியான் மாநாட்டில் பங்கேற்காமல் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதிலிருந்து, மோடி அனைத்து ஆசியான் உச்சி மாநாடுகளிலும் பங்கேற்று வந்தார்; 2022-ஐ தவிர. இம்முறை, இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பிரதிநிதியாக பங்கேற்கும் வாய்ப்புள்ளது.

அதேபோல், இதற்கு முன்னர் எகிப்தில் நடைபெற்ற இஸ்ரேல்–ஹமாஸ் அமைதி மாநாட்டிலும் டிரம்ப் தலைமையேற்றிருந்தார். அப்போது கூட மோடி நேரில் பங்கேற்காமல், இந்தியா சார்பில் வெளியுறவு இணை மந்திரி பங்கேற்றிருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Modi not participating ASEAN Summit Did Prime Minister avoid Trump


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->