இதெல்லாம் தவறு, கேவலம்! அமைச்சர் பொன்முடியால் வெடித்த சர்ச்சை! கொந்தளிக்கும் நடிகை! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் மர்மமான முறையில் இருந்ததாக சொல்லப்படும் 4 வயது சிறுமிக்கு தமிழக அரசு 3 லட்சம் நிவாரணம் அறிவித்திருந்தது.

நேற்று அந்த சிறுமிக்கு இறுதி அஞ்சலி நடக்கும் சமயத்தில் வந்த அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட திமுகவினர், ஸ்டாலின் சிரித்த முகத்துடன் உள்ள புகைப்படத்துடன் கூடிய காசோலை கவர் ஒன்றை சிறுமியின் தாயிடம் கொடுக்க முயன்றனர்.

ஆனால், அதனை அவர் வாங்க மறுக்க, பின்னர் அங்கு நடந்த விவரங்கள் உடன் கூடிய காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதுகுறித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்தவரும், நடிகையுமான வினோதினி வைத்தியநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இது என்ன அவலம்? அந்த குழந்தையின் அம்மாவும் பெரியம்மாவும் இயலாமையின் உச்சத்தில் தங்கள் மனக்குமுறலை சொல்கின்றனர். 

இவர்கள் என்னவென்றால் அந்தம்மாவை ஏதோ ஒரு mild irritant போல “handle” மற்றும் “manage” செய்துகொண்டிருக்கின்றனர். நீ வா போ என்று ஒருமையில் பேசுகின்றனர். அவர்கள்மேல் இவர்கள் கைகள் படுகிறது. 

ஆனால் அமைச்சர்மேல் அந்தம்மாவினுடைய கை படக்கூடாதாம். உங்கள் வீட்டு குழந்தை இறந்தால், அதுவும் இப்படி கோரமான முறையில் இறந்தால் இப்படி ரெண்டுபேர் அங்கு பஞ்சாயத்துக்கு வந்து, உங்களைத்தேற்றும் விதமாக சடலத்தை அடக்கம் செய்யும் முன் காசோலையை நீட்டினால் எப்படியிருக்கும் என்பதை கர்மா இஸ் எ பூமராங் என்பதற்கு ஏற்ப நடக்கும் பொழுது பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 

இதில் சில மொரட்டு முட்டுக்கள் வேறு, கமெண்டுகளில். முட்டுக்கொடுப்பவரே, மனசாட்சி தன்மானம் சொரணை மனிதாபிமானம் இருந்தால் இப்படி முட்டுக்கொடுக்க மாட்டீர்கள். 

அந்த காசோலையை பின்னால் அவர்கள் அக்ஸெப்ட் செய்தார்கள் என்று இருந்தால்கூட அந்த நேரத்தில் கொடுத்ததும் நடந்துகொண்ட ஒட்டுமொத்த தோரணையும் தவறு, கேவலம். 

சட்ட ஒழுங்கு சீர்கேடு பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு நிர்வாகச் சீர்கேடு போதை கலாச்சாரம் இது எல்லாவற்றையும் அடிமட்டத்திலிருந்து சரி செய்ய வேண்டும். 

அதற்கு முதலில் இப்படிப்பட்ட patch work வேலைகளை நிறுத்திக்கொண்டு அடிமட்டத்திலிருந்து ஒரு க்ளீன் அப் தேவைப்படுகிறது. இதை சுட்டிக்காட்டும் அனைவரையும் சிறையில் அடைத்தால் சுட்டிக்காட்ட இன்னும் சிலர் முளைத்து வருவர். This behaviour is completely unacceptable and totally irresponsible. Read the goddamn room." என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MNM Vinodhini condemn to DMK Minister


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->