மின்னல் வேகம் என்பார்கள், ஆனால் அதைவிட அதிகமானதை இனி ஸ்டாலின் வேகம்.. எம்.எல்.ஏ ரோஜா.!! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ரோஜா தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், எங்கள் தொகுதியில் மற்றும் சித்துார் மாவட்டத்தில் வசிக்கின்ற தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழி பாடத்திட்டத்திற்கான 10,000 புத்தகங்கள் இலவசமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். 

தங்களை நேற்று காலை 11.00 மணியளவில் சந்தித்து கோரிக்கை விடுத்து, திரும்பி நாங்கள் நகரி வந்து சேர்வதற்குள் "நகரி சட்டமன்ற உறுப்பினர் திருமதி. RK.ரோஜா அவர்களின் வேண்டுகோளை ஏற்று, தமிழக அரசின் பாடத்திட்டங்களை சித்துார் மாவட்ட பள்ளிகளுக்கு 2021-2022ஆம் ஆண்டின், கல்வி ஆண்டின் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான ஆண்டு தமிழ் பாடநூல்கள் வகுப்புக்கு தலா 1000 பிரதிகள் வீதம் இக்கழகத்தின் சென்னை வட்டார அலுவலக மற்றும் அடையாறு கிடங்கில் இலவசமாக பாடநூல்களை பெற்று கொள்ளும்படி தெரிவித்துக் கொள்கிறது," என்ற தங்கள், அரசு உத்தரவு என்னுடைய அலுவலகத்திற்கு வந்து சேர்ந்துவிட்டது. மின்னல் வேகம் என்பார்கள், ஆனால் அதை விட வேகமாக தங்கள் உத்தரவு எங்களுக்கு வந்து அடைந்ததை கண்டு நாங்கள் வியந்து போனோம். மின்னல் வேகம் என்பார்கள், ஆனால் அதைவிட அதிகமானதை இனி ஸ்டாலின் வேகம் என்றே குறிப்பிடலாம், என்றே சந்தோஷத்தில் பாராட்ட தோன்றுகிறது. 

எங்கள் கோரிக்கைகளை ஏற்று சித்துார் மாவட்டத்தில் வாழ்கின்ற தமிழ் குழந்தைகளுக்கு இலவசமாக தமிழ் மொழி புத்தகத்தை வழங்கிய தங்களுக்கு ஆந்திரா வாழ் தமிழர்கள் சார்பில் இதயம் கனிந்த நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mla raja letter to cm mk stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->