திமுகவினருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வார்னிங்.. கலக்கத்தில் திமுகவின் முக்கிய புள்ளிகள்.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பிறகு அவர் பேசியதாவது, தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மக்கள் நம்மை வெற்றி பெற செய்துள்ளனர். 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றது எதிர்பாராத ஒன்று. வெற்றியை காண கலைஞர் இல்லை என்ற வருத்தம் இருந்தாலும், அவரது சிலையை திறந்து வைத்தது மகிழ்ச்சி. கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு திமுகவினர் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். பேரறிஞர் அண்ணா சொன்னது போல மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவோம். 

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தவறு செய்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருந்தா விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக சிறு தவறு நடந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். மோயர் என்பது பதவியல்ல பொறுப்பு. திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களோடு மக்களாக நின்று பணியாற்ற வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் கட்சி கட்டுப்பாட்டை மீறி பெற்ற பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில் நடவடிக்கை உறுதி. இது மிரட்டல் அல்ல. மக்கள் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin warning for dmk members


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->