'திமுகவில் தொடர்ந்து 02வது முறை முதலமைச்சராக யாரும் ஆனதில்லை என்பதை உடைத்துக் காட்டுவேன்': மு.க.ஸ்டாலின் சூளுரை..!
MK Stalin vows to shatter the precedent that no one from the DMK has ever served as Chief Minister for a second consecutive term
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறஉள்ள நிலையில் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் சூடுபிடிக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனபடி, திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் திருவாரூரில் முதற்கட்ட பிரசாரத்தை தொடங்கி திருச்சியில் முடித்தார்.
02-ஆம் கட்டமாக ஏப்ரல் 03-ஆம் தேதி நெல்லையிலும், 03-ஆம் கட்டமாக கடந்த 06-ஆம் தேதி புதுச்சேரியிலும் பிரசாரத்தை மேற்கொண்டார். அத்துடன், நேற்று மாலை மறைமலை நகரில் திமுக-கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். இன்று முதல் 04-ஆம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தஞ்சையில் தொடங்கினார்.
இங்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் திருவையாறு வேட்பாளர் துரை சந்திரசேகரன், தஞ்சை சண்.ராமநாதன், ஒரத்தநாடு வைத்திலிங்கம், பட்டுக்கோட்டை அண்ணாதுரை, பேராவூரணி அசோக்குமார், திருவிடைமருதூர் கோவி.செழியன், கும்பகோணம் அன்பழகன், பாபநாசம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் ஷாஜகான் ஆகிய 08 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
அதன்படி, தஞ்சாவூரில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், அவதூறுகள் பேசுவதற்கு மட்டும்தான் எடப்பாடி பழனிசாமி வாய் திறப்பாரா?. பச்சை துண்டை போட்டுக்கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி என்று விமர்சித்துள்ளார்.
அத்துடன், சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்திய பிரதமர் உறுப்படியாக எதுவும் செய்யவில்லை என்றும், அதிகாரிகளை எப்படி பந்தாடலாம் என்பதில் தான் ஒன்றிய பாஜக அரசின் முழு கவனமும் உள்ளது என்று மத்திய அரசையும் விமர்சித்துள்ளார்.
மேலும், 'யோகத்தை நம்புபவன் அல்ல மு.க.ஸ்டாலின், உழைப்பை நம்புபவன். கலைஞரிடம் உழைப்பை கற்றுக் கொண்ட மாணவர் நான்; திமுகவில் தொடர்ந்து 02வது முறை முதலமைச்சராக யாரும் ஆனதில்லை என்பதை உடைத்துக் காட்டுவேன்' என்று சூளுரைத்துள்ளார்.
English Summary
MK Stalin vows to shatter the precedent that no one from the DMK has ever served as Chief Minister for a second consecutive term