சென்னை காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் மாற்றம்; தேர்தல் ஆணையம் உத்தரவு..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நாள் முதல் மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்காக, மாநிலத்தில் இருக்கும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வது உள்ளிட்ட உத்தரவுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை கடந்த 08-ஆம் தேதி தேர்தல் ஆணையம் மாற்றியது. புதிய தலைமைச் செயலாளராக சாய்குமார் நியமிக்கப்பட்டு, அவர் உடனடியாக பதவியேற்றார். அடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டலை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அருணை மாற்றியும், புதிய காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் ஐபிஎஸ்-ஐ நியமித்தும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அபின் தினேஷ் மோதக் ஐபிஎஸ் உடனடியாக பதவி ஏற்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அபின் தினேஷ் மோதக் 

இவர் குற்றப்பிரிவு மற்றும் அமலாக்கப் பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக இருந்து வருகிறார். தற்போது சென்னை காவல் ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 1997 ஐபிஎஸ் அதிகாரியான அபின் தினேஷ் மோதக், மாநில குற்ற ஆவணக் காப்பகம், பொருளாதார குற்றப்பிரிவிலும், சிபிஐ மற்றும் என்.ஐ.ஏ. போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளிலும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Police Commissioner Arun IPS Transferred


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->