தமிழகத்தில் தேர்தல் முடியும் வரை துரந்தர் 2-க்கு தடை கோரி மனு; தள்ளுபடி செய்துள்ள உயர் நீதிமன்றம்..!
High Court dismisses petition seeking a ban on Durandhar 2 in Tamil Nadu until the elections conclude
தமிழகத்தில் வரும் 23-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.இந்த தேர்தலை முன்னிட்டு, 'துரந்தர் 2' திரைப்படத்திற்கு தேர்தல் முடியும் வரை தடை விதிக்க கோரிய பொதுநல வழக்கு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ரன்வீர் சிங் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவான படம் 'துரந்தர் 2'. இந்த திரைப்படத்தை பாகம் 01, 02 என ஆதித்யா தர் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் 02 பாகம் 'துரந்தர் 2' கடந்த மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் இத்திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் தேர்தலோ முடியும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த டி.ராகேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த மார்ச் 15ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அன்று முதல் தேர்தல் விதிமீறல் நடவடிக்கை அமலில் உள்ளது. இப்படத்தில் அரசியல் தொடர்பாக ஒரு சார்பான கருத்துகள் இருப்பதாக கூறி, தமிழக திரையரங்குகளில் தற்போதைய நிலையில் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
அத்துடன், தேர்தலுக்குப் பின் 'துரந்தர் 2' திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க, நீதிபதி அருள் முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில், தமிழகத்திலும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு கொள்கைகளை இப்படம் பாராட்டும் வகையில் உள்ளதால் இத்திரைப்படத்தின் திரையிட்டிருப்பது, நடைமுறையில் உள்ள தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று வாதிடப்பட்டது.
ஆனால், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும், திரைப்படத்தின் எந்தப் பகுதிகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுகின்றன என்பதைக் தெளிவாக குறிப்பிடவில்லை என தெரிவித்து, மத்திய திரைப்படச் தணிக்கை வாரியம் வழங்கிய சான்றிதழை மனுதாரர் எதிர்க்கவில்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.
English Summary
High Court dismisses petition seeking a ban on Durandhar 2 in Tamil Nadu until the elections conclude