'திருட்டுத்தனம் வேண்டாம'...! 'ஜன நாயகன்' படத்திற்காக குரல் கொடுத்த சிவகார்த்திகேயன்...! - வைரலாகும் பதிவு
We dont want theft Sivakarthikeyan gave his voice film jananayakan Viral post
நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம், திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தது.
கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படம், தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்டபோது, அதில் இடம்பெற்றிருந்த மதம் மற்றும் பாதுகாப்புப் படைகள் தொடர்பான சில காட்சிகள் காரணமாக, தணிக்கை வாரியத்தினரால் மறுஆய்வு குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டது.

பல கட்ட போராட்டங்களும் ஆலோசனைகளும் தொடர்ந்து, இறுதியாக இப்படம் மறுதணிக்கைக்காக மீண்டும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விரைவில் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆரம்பத்தில் பொங்கல் வெளியீடாக திரைக்கு வர திட்டமிடப்பட்டிருந்த ‘ஜன நாயகன்’, சென்சார் சிக்கல்களால் நீதிமன்றம் வரை சென்றதால் தாமதமடைந்தது.
பின்னர் தமிழக சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்ததும், மே மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியீடு செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது.இந்த பரபரப்பான சூழலில், நேற்று மாலை இப்படத்தின் சில முக்கிய காட்சிகள் மர்ம நபர்களால் சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்தன.
அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை, சுமார் 3 மணி நேரம் கொண்ட முழு திரைப்படமே இணையத்தில் வெளியானதாக தகவல்கள் வெளியாகி, தயாரிப்பு நிறுவனத்தையும் படக்குழுவினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதள பதிவின் மூலம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “ஒவ்வொரு திரைப்படமும் நூற்றுக்கணக்கான மனிதர்களின் கனவும் கடின உழைப்பும் சேர்ந்த உருவாக்கம்.
அதை திருட்டுத்தனமாக பார்க்காமல், திரையரங்குகளில் வெளியாகும் வரை காத்திருந்து ஆதரிக்க வேண்டும். இதற்குப் பொறுப்பானவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். திறமையையும் உழைப்பையும் மதிப்பது நம் கடமை” எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
We dont want theft Sivakarthikeyan gave his voice film jananayakan Viral post