நடிகர் நானியின் மனதை கவர்ந்த ஒரே ஹீரோயின் யார்...? - நினைவுகூர்ந்த உருக்கமான தருணம்...! - Seithipunal
Seithipunal


தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக திகழும் நானி, தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நடிகராக மட்டுமன்றி, தயாரிப்பாளராகவும் தன்னுடைய திறமையை நிரூபித்து வரும் அவர், தனது ‘வால் போஸ்டர் சினிமா’ நிறுவனத்தின் மூலம் பல தரமான படங்களை உருவாக்கி வருகிறார்.

சமீபத்தில் அவரது தயாரிப்பில் வெளியான ‘கோர்ட்டு’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப் பாதையில் பயணித்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது நானி ஹீரோவாக ‘தி பாரடைஸ்’ படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கி வருகிறார்.

இதில் நானி மாறுபட்ட தோற்றத்தில் காட்சியளிப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் நானி தனது மனதிற்கு நெருக்கமான நடிகையை பற்றி உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

அவர் கூறுகையில், “எனக்கு ஸ்ரீதேவி மிகவும் பிடித்த நடிகை. அவர் நடித்த Kshana Kshanam திரைப்படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படமாக அது உள்ளது” என தெரிவித்துள்ளார்.

நானியின் இந்த உணர்ச்சி பூர்வமான கருத்து, ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது என தெரிவிக்கப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Who only heroine who captivated actor Nani heart heartwarming moment he remembered


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->