சிறுமியை வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த வழக்கு: காசியாபாத் காவல்துறை கண்காணிப்பாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..! - Seithipunal
Seithipunal


காசியாபத்தில் கடந்த வாரம் சிறுமி ஒருவர் பாலியல் வன்முறை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

வன்கொடுமைசெய்யப்பட்ட சிறுமியை, உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரது பெற்றோர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை தராததால் அரசு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் போலீசார் உரிய விசாரணை நடத்த வில்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இதன் போது குறித்த சிறுமி வன்கொடுமை வழக்கை போக்சோவில் சேர்க்காத காவல்துறைக்கும் சிகிச்சை அளிக்காத மருத்துவமனைக்கும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் காசியாபாத் காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Supreme Court Issues Notice to Ghaziabad Superintendent of Police in Case of Girl Who Died After Being Raped


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->