10 தோல்வி பழனிசாமிக்கு 11-வது தோல்வி ஸ்டிக்கரை ஒட்ட மக்கள் தயாராகிவிட்டனர்: மு.க ஸ்டாலின் பேச்சு..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திருவாரூரில் முதல் கட்ட பிரசாரத்தை தொடங்கி திருச்சியில் முடித்தார். இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நெல்லையில் இருந்து இன்று தென் மாவட்ட பிரசாரத்தை தொடங்கினார்.

அதன்படி, இன்று பாளையங்கோட்டை தெற்கு பைபாஸ் சாலையில் சரவணா ஸ்டோர்ஸ் எதிரில் உள்ள மைதானத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளர் அப்பாவு, பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் அப்துல்வஹாப், நெல்லை தொகுதி திமுக வேட்பாளர் சுப்பிரமணியன் ஆகியோரை ஆதரித்து பரப்புரை செய்தார். அத்துடன், நாங்குநேரி, அம்பாசமுத்திரம் தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கும் ஆதரவு திரட்டி பரப்புரை மேற்கொண்டார்.

அதன்படி, பாளையங்கோட்டையில் பேசிய முதலமைச்சர் கூறியதாவது;  பாளையங்கோட்டை எப்போதும் திமுகவின் கோட்டை. திமுகவின் 2.0 ஆட்சிக்கு நான் ரெடி, நீங்க ரெடியா?. நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன். இந்தியாவே தெற்கே திரும்பிப் பார்க்கக் கூடிய அளவுக்கு திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டை தலைநிமிர வைத்துள்ளோம். ஐபிஎல் கிரிக்கெட்டில் சிக்ஸர்கள் பார்த்திருப்பீர்கள்; நாம் தேர்தல் அறிக்கையில் சிக்ஸர்கள் அடித்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

அதேப்போன்று, கடந்த 05 ஆண்டுகளில் இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றி இருக்கிறோம் என்றும், திராவிட மாடல் ஆட்சியில் மலை அளவு சாதனைகளை செய்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். அதிமுக முதுகில் ஏறி அரசியல் பண்பாட்டு படையெடுப்பு நடத்துகிறது பாஜக என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை கெடுக்க நினைக்கும் பாஜகவிடம் இருந்து காக்க வந்துள்ளேன் என்றும், சுய சிந்தனை இல்லாமல், துரோகத்தின் மொத்த உருவமாக பத்து தோல்வி பழனிசாமி வாக்கு கேட்டு வருகிறார் என்று விமர்சித்துள்ளதோடு, எடப்பாடி பழனிசாமியை அமித்ஷா ஆட்டுவிக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

மக்களை கேஸ் சிலிண்டருக்காக பிரதமர் மோடி காக்க வைத்துள்ளார் என்றும், கொரோனா காலத்தில் காமெடி ஷோ நடத்தியவர் மோடி என்றும் பிரதமரை விமர்சித்துள்ளதோடு, தமிழ்நாட்டுக்கு எந்த திட்டங்களும் இல்லை என்பதே மோடி மாடல் என்று சாடியுள்ளார். அத்துடன், பணமதிப்பிழப்பால் கோடிக்கணக்கான மக்களை ஏடிஎம் முன்பு காக்க வைத்தார் மோடி என்றும், உரிமைத் தொகை திட்டத்துக்கு குல விளக்கு என பெயர் மாற்றி ஸ்டிக்கர் ஒட்டியுள்ளார் எடப்பாடி என்று தெரிவித்துள்ளார். மக்கள் அவர்களை புறக்கணித்துவிட்டார்கள் என்பதை உணர்ந்து திமுகவின் திட்டங்களை காப்பி அடிக்கிறார் எடப்பாடி என்று விமர்சித்துள்ளார்.

அதனுடன், சொன்னதை மட்டுமல்ல, சொல்லாதததையும் ஸ்டாலின் செய்வார் என மக்கள் நம்புகின்றனர். எடப்பாடி பழனிசாமி சொன்னதையும் செய்யமாட்டார்; சொந்தமாகவும் எதையும் செய்யமாட்டார் என்று தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கைதான் சூப்பர் ஸ்டார் என்று குழந்தைகூட சொல்லும் என்றும், எடப்பாடி பழனிசாமிக்கு 11வது தோல்வி ஸ்டிக்கரை ஒட்ட மக்கள் தயாராகி விட்டதாக தெரிவித்துள்ளார். ஏனென்றால் களத்தில் இருப்பது சூப்பர் ஸ்டார். சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா திமுகவின் தேர்தல் அறிக்கை என்று சின்னக் குழந்தையும் சொல்லும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பாஜக, அதிமுக சதி செயலை முறியடித்து மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000 கொடுத்துள்ளதாகவும், கடந்த 05 ஆண்டுகளில் இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றி இருக்கிறோம். பெண்களின் பாதுகாப்புக்காக அனைத்து நகரங்களிலும் பிங்க் ரோந்து நிலையங்கள் அமைக்கப்படும். கலைஞரின் மகன், சொன்னால் சொன்னதை செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

M.K. Stalin states that the people are ready to slap the 11th defeat label on Palaniswami


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->