#Breaking || ஆளுநரை சந்தித்த முக ஸ்டாலின்., பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தியை கொலை செய்த வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் கடந்த 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநருடன், திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு நடத்தியுள்ளார்.ராஜிவ் கொலை குற்றவாளிகள் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து தமிழக ஆளுநரிடம், திமுக தலைவர் ஸ்டாலின் மனு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சியின் மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், பொன்முடி, எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், தயாநிதிமாறன் ஆகியோரும் இந்த சந்திப்பில் உடன் இருந்தனர்.

இந்நிலையில், ஆளுநரை சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்த முக ஸ்டாலின், "பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநரை வலியுறுத்தினோம். மனிதாபிமான அடிப்படையில் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் தமிழக ஆளுநரிடம் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம்." என்று தெரிவித்தார்.

ஆளுநரின் பதில் தங்களுக்கு திருப்தி அளித்ததா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது நாங்கள் திருப்தியுடன் தான் செல்கிறோம் என்று மு க ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், ஆளுனரிடம் வேறு விஷயம் நீங்கள் ஆலோசனை நடத்தினார்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மு க ஸ்டாலின், நாங்கள் பல்வேறு விஷயங்களை பேசினோம். அது பற்றி இங்கு கூற முடியாது என்று, ஸ்டாலின் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin press meet nov 24


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->