நாளை பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்குவீர்களா..? சூர்யகுமார் யாதவ் அளித்த சுவாரஸ்ய பதில்..! - Seithipunal
Seithipunal


10 வது டி20 உலகக் கோப்பை போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்தவுள்ளது. 

இதுவரை நடந்த போட்டிகளில் இரு அணிகளும் இரண்டு போட்டிகளில் விளையாடி, இரண்டு வெற்றிகளுடன், ரன்ரேட் அடிப்படையில், இந்தியா முதலிடத்திலும், பாகிஸ்தான் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

கிரிக்கெட் என்று  வருகையில் கோடிக்கணக்காண ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரே போட்டி என்றால் அது இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டிதான். நாளை 27 வது போட்டியான இந்த போட்டி, கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நாளை இரவு 07:00 மணிக்கு தொடங்கவுள்ளது.

இந்த போட்டிக்காக இரு அணிகளும் கொழும்பில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். முன்னதாக பங்களாதேஷ் அணிக்கு ஆதரவு தெரிவித்து, இந்த போட்டியை பாகிஸ்தான் புறக்கணிப்பதாக அறிவித்தது. அதன் பின்னர் ஐசிசி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இறுதியாக பாகிஸ்தான் அரசு, அந்நாட்டு கிரிக்கெட் அணியை இந்தியாவுக்கு எதிராக விளையாட அனுமதித்தது.

இருப்பினும் நாளை நடக்கும் போட்டியில், இரு நாட்டு வீரர்களும் எவ்வாறு நடந்து கொள்வார்கள்..? இம்முறையாவது வீரர்கள் கைக்குலுக்கிக் கொள்வார்களா..? என்ற சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. அத்துடன், பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு சவால்களையும் விடுத்துள்ள நிலையில், போட்டி நாளை சூடுபிடிக்கவுள்ளது.

 

இந்நிலையில், கொழும்பில் இந்தியா- பாகிஸ்தான் போட்டி குறித்து சூர்யகுமார் பேட்டி அளித்தார். அப்போது பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்குவீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்  பதிலளித்துள்ளதாவது;

''24 மணி நேரம் காத்திருங்கள். நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவோம். அதன்பின் இது குறித்து முடிவு செய்வோம். நீங்கள் நன்றாக தூங்குங்கள். நன்றாக சாப்பிடுங்கள்.'' என்று தெரிவித்துள்ளதோடு, நாளைய போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Suryakumar Yadavs interesting answer about tomorrows India and Pakistan match


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->