மாறி மாறி டிரோன் தாக்குதல் நடத்தும் ரஷியா மற்றும் உக்ரைன்; இருவர் பரிதாபமாக பலி..! - Seithipunal
Seithipunal


உக்ரைன் - ரஷியா இடையிலான போர் பலதரப்பட்ட பேச்சு வார்த்தைகள் நடந்த பின்னும் இன்னும் முடிவுக்கு வந்தப் பாடில்லை. இந்த போரை நிறுத்துவதற்கான புதிய அமைதி பேச்சுவார்த்தை ஜெனீவாவில் அடுத்த வாரம் நடைபெற திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், இரு நாடுகளும் மாறிமாறி டிரோன் தாக்குதல் நடத்திய நிலையில், இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உக்ரைனில் உள்ள கருங்கடல் துறைமுக நகரான ஒடேசாவில் உள்ள குடியிருப்பு கட்டிடம் மீது ரஷியா டிரோன் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் வயதான பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அத்துடன், இருநாட்டு எல்லையில் உள்ள பிரியான்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதில்,ரஷியாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், ரஷியாவின் எல்லையில் அமைந்துள்ள பெல்கொரோட் நகர் மீது உக்ரைன் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியதில், இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.05 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இன்று மாறிமாறி டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அடுத்த வாரம்  ஜெனீவாவில் ரஷியா மற்றும் உக்ரைன் தூதர்களுடன் அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. செவ்வாய் மற்றும் புதன் கிழமை இந்த பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக ரஷிய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, உக்ரைன் அதிபரின் தகவல் தொடர்பு ஆலோசகரும் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதை  உறுதிப்படுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Two people tragically died in alternating drone attacks in Russia and Ukraine


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->