பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மரியாதை.!!
mk stalin 69th birthday
முதலமைச்சர் முக ஸ்டாலின் மார்ச் 1, 1953 ஆண்டு பிறந்தார். இவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் ஆவார். முதல்வர் முக ஸ்டாலின் 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் 37-ஆவது மேயராக பொறுப்பில் இருந்தார். இதையடுத்து, தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராக, 29 மே 2009 முதல் மே 15, 2011 வரை பொறுப்பு வகித்துள்ளார்.

ஆகஸ்ட் 28, 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பில் உள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக மு.க. ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். தேர்தல் முடிவுகளில் இக்கூட்டணி 159 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து மே 7-ஆம் தேதி மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், 69 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். முதலமைச்சராக பதவியேற்ற பின் முதல் பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.