துரைமுருகனுக்கு போன் செய்த முக அழகிரி.. ஆட்டம் கண்ட திமுக.! உற்சாகத்தில் துரைமுருகன்.!!
mk alagiri wish for durai murugan
திமுகவில் பொது செயலாளர் மற்றும் பொருளாளர்க்கான தேர்வு நடைபெற்று வருகிறது. தற்போது பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி ஆர் பாலு வேட்புமனு தாக்கல் செய்துள்ளன. இவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் வெளியிடப்படும்.
இந்நிலையில், பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டிஆர் பாலுவும் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். இதற்கு பல்வேறு கட்சியினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இச்சமயத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி, துரைமுருகனுக்கு போன் செய்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். எல்லாம் நல்லதாக நடக்கும், பொறுமையாக இருங்கள் என்றும் கூறியதாக கூறப்படுகிறது.

ஆனால், டி ஆர் பாலு வாழ்த்து தெரிவிக்கவில்லை. முக அழகிரி எதற்காக டி ஆர் பாலு வாழ்த்து தெரிவிக்கவில்லை என தற்போது திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கருணாநிதியின் செல்லப் செல்லப் பிள்ளையாக இருந்தவர் துரைமுருகன். இளைஞராக இருந்தபோது கருணாநிதி வீட்டிற்கு உரிமையுடன் சென்று வருவார்.

ஆகையால், அழகிரிக்கு துரைமுருகன் பிடித்தமான நபராக மாறிவிட்டார். துரைமுருகனுக்கும் அழகிரி மீது பிரியம் அதிகம். அதேபோல் அழகிரிக்கு துரைமுருகன் என்றாலே பிரியம் அதிகம். ஆகையால் வாழ்த்து தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
English Summary
mk alagiri wish for durai murugan