'டாஸ்மாக் 10 ரூபாய்' விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர்...! - விலை பட்டியலில் வரப்போகும் மாற்றம் என்ன...? - Seithipunal
Seithipunal


மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ், கோவையில் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் டாஸ்மாக் நிர்வாகத்தில் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்ப்பு உருவாக்கியுள்ளது. குறிப்பாக, நீண்டகாலமாக நிலவி வந்த முறைகேடுகளை முற்றிலுமாக கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விக்னேஷ் தெரிவிக்கையில், “டாஸ்மாக் நிர்வாகத்தில் அடிப்படை மாற்றங்களை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் ரூ.1,000 கோடி வரை அரசுக்கு செல்ல வேண்டிய தொகை பல்வேறு வழிகளில் கட்சிகளிடம் சென்று கொண்டிருந்தது.

தற்போது அந்த வருவாய் முழுமையாக அரசின் கணக்கில் வரும்படி புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி, தனியார் மதுபான விடுதிகளிலும் பார்ட்டி பண்ட் என்ற பெயரில் பண வசூல் நடைபெற்றது. அந்த முறைக்கும் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.

இனிமேல் அந்த தொகைகளும் நேரடியாக அரசின் வருவாயாக மாற்றப்படும்.மதுபான பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கும் நடைமுறையை கட்டுப்படுத்த சிறப்பு சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. விலைப்பட்டியலில் குறிப்பிடப்பட்ட தொகையைத் தவிர கூடுதலாக எந்த தொகையும் வசூலிக்க அனுமதி இல்லை.

இனிமேல் பாட்டில்களுக்கு தனியாக ரூ.10 ஸ்டிக்கர் ஒட்டும் நடைமுறை இருக்காது. அதற்கு பதிலாக அந்த தொகை நேரடியாக விலைப்பட்டியலிலேயே சேர்க்கப்படும். பாட்டிலை மீண்டும் ஒப்படைக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.10-ஐ திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.இதையும் மீறி யாரேனும் கூடுதல் தொகை வசூலித்தால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது பணிநீக்கம் வரை செல்லும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

டாஸ்மாக் ஊழியர்கள் நீண்டகாலமாக குறைந்த வருமானத்தில் பணியாற்றி வருகின்றனர். இதனால் தவறான வசூல் நடைமுறைகள் உருவாகும் சூழல் முந்தைய ஆட்சியில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கைகள் விரைவில் பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.கடந்த 20 ஆண்டுகளாக அவர்களின் அடிப்படை கோரிக்கைகள் நிறைவேறாமல் இருப்பது வேதனையளிக்கிறது. அந்த நிலையை மாற்றும் பணியில் தற்போதைய அரசு முழு தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறது” என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

minister who put end Tasmac 10 rupees issue What upcoming change price list


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->