தகுதி இல்லாதவர் எடப்பாடி பழனிச்சாமி.. ஜெயக்குமார் ஒரு காமெடி பீஸ்.. போட்டுத் தாக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி..!!
Minister Senthilbalaji criticized EPS and jayakumar
தமிழக முழுவதும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் இரண்டு நாட்களாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களிலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் வீடுகளிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது "சில தொழில் நிறுவனங்களிலும் வருமான வரி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரி எய்ப்ப நடைபெற்றதாக கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கலாம்.
வருமான வரி சோதனை முடிவுக்கு வந்த பின் நான் பதிலளிக்கிறேன். வருமான வரி சோதனையானது ஆயிரம் முறை நடைபெற்றாலும் அதை கண்டு நான் அஞ்சப்போவதில்லை. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க வருமானவரித் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும். சோதனைக்கு வந்த அதிகாரிகள் ஐடி கார்டு காட்டவே இல்லை.

அவர்கள் ஐடி கார்டு காட்டி இருந்தால் இவ்வளவு பெரிய தாக்குதல் நடைபெற்று இருக்காது. எதிர்க்கட்சித் தலைவர் என சொல்லிக் கொள்ள தகுதி இல்லாதவர் எடப்பாடி பழனிச்சாமி. ஜெயக்குமார் ஒரு காமெடி பீஸ். சொந்தத் தொகுதியில் கூட வெற்றி பெற முடியாதவர் தான் ஜெயக்குமார்.
வருமானவரித்துறை சோதனை ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல. எத்தனை முறை சோதனை நடத்தினாலும் அதனை எதிர் கொண்டு தாங்கிக் கொள்வதற்கான சக்தியை முதலமைச்சர் எனக்கு அளித்துள்ளார். என் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பு வழங்கியுள்ள முதலமைச்சரின் நம்பிக்கை காப்பாற்றுவேன்" என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
English Summary
Minister Senthilbalaji criticized EPS and jayakumar