சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார்: சட்ட திருத்த முன்வடிவை பேரவையில் தாக்கல் செய்த அமைச்சர் செங்கோட்டையன்..! - Seithipunal
Seithipunal


சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவதற்கான சட்ட திருத்த முன்வடிவை வருவாய் மற்றும் பேரீடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

கடந்த 19 ஆம் தேதி நடந்த சட்டப்பேரவையில், முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ்  சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதை செயல்படுத்தும் விதமாக சட்டப்பேரவையில் 1951-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் சட்டம் திருத்த சட்டமுன்வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதில் சட்டமன்றப் பேரவை உறுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர வாகனப் படித்தொகை 25 ஆயிரத்தில் இருந்து 75 ஆயிரமாக உயர்த்தி வழங்குதல் மற்றும் தனி உதவியாளர் படித்தொகை 25 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. இதற்கான திருத்தம் சட்டத்தில் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டமுன்வடிவு பேரவை இறுதிநாளன்று பேரவையின் முடிவுக்கு விடப்பட்டு நிறைவேற்றப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Sengottaiyan presented the amendment bill to provide cars to MLAs in the Assembly


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




சினிமா

Seithipunal
--> -->