28 மாவட்ட உள்ளாட்சி தனி அலுவலர்கள் பதவி காலம் நீட்டிப்பு; சட்டத்திருத்த முன்வடிவு பேரவையில் தாக்கல்..! - Seithipunal
Seithipunal


28 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நியமிக்கப்பட்ட தனி அலுவலர்களின் பதவிகாலத்தை வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்வதற்கான சட்டத்திருத்த முன்வடிவு இன்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களை தவிர 28 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பதவி காலம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 05 தேதியன்று முடிவடிடைந்தது. 

அதனைத்தொடர்ந்து, இந்த உள்ளாட்சி அமைப்பகளுக்கு தேர்தல் நடத்தப்படவேண்டும். ஆனால், சிற்தொகுதிகளின் எல்லை மறுவரையறை மற்றும் இட ஒதுக்கீடு தொடர்பான பணிகள் நிறைவு பெறாததால் தேர்தல் நடத்தமுடியவில்லை என்று சட்டமுன்வடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே வழக்கமான தேர்தல் நடத்தும் வரை தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு 2025 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 05 வரை ஊராட்சி அமைப்புகளை நிர்வகிக்க 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. 

தற்போது வரை மறுவரையறை பணிகள் முடியாததால் மேலும் தனி அலுவலர்களின் பதவிகாலத்தை வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்வதற்கு சட்டதிருத்தம் செய்ய சட்டமுன்வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Extension of tenure of 28 district local government officers


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




சினிமா

Seithipunal
--> -->