'காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி வைத்தால் சட்டமன்றத்திற்குள் வர முடியும் என்பது அவர்களுக்கு தெரியும்'; அமைச்சர் ரகுபதி..! - Seithipunal
Seithipunal


தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ்க்கு கட்சிக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் அதிகப்படியான தொகுதி கேட்பதால் இழுபறி நீடிக்கிறது. இன்றைக்குள் முடிவு செய்ய திமுக கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு திமுக இறுதியாக 29+2 ஒதுக்க தயாராக இருப்பதாக திமுக தெரிவித்துள்ளது. இந்நிலையில் த.வெ.க. உடன் காங்கிரஸ் திரைமறையில் பேசி வருவதாக செய்தி பரவி வருவது குறித்து அமைச்சர் ரகுபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், திரைமறையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்பது அவரவர்கள் விட்டுக் கொண்டிருக்கின்ற கப்சாதான் என்று வேறு ஒன்றும் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எங்களை (திமுக) பொறுத்தவரையில் தெளிவாக இருக்கிறோம். திமுக அரசியல் கட்சி. இங்கு அரசியல் அந்தஸ்து இழக்க விரும்பமாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளதோடு, தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி வைத்தால்தான் சட்டமன்றத்திற்குள் அவர்கள் வர முடியும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும் என்று அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Raghupathi says that Congress knows that they can enter the Assembly if they form an alliance with DMK


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->