"காலாவதியாக வேண்டியது ஆளுநர் பதவி தான்" - அமைச்சர் பொன்முடி.! தமிழக ஆளுநருக்கு கொடுத்த பதிலடி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கல்வி நிலை பற்றி தவறான தகவல்களை பரப்பி வருவதாக ஆளுநரை குற்றம் சாட்டி இருக்கிறார் அமைச்சர் பொன்முடி. மேலும் திராவிட அரசு வந்த பிறகு சனாதானம் காலாவதி ஆகிவிட்டது என்றும் இனி காலாவதியாக வேண்டியது ஆளுநர் பதவி தான் எனவும்  காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார் பொன்முடி.

சமீபத்தில் பேசிய ஒரு நிகழ்ச்சி ஒன்றில்  சென்னை பல்கலைக்கழகம் இந்திய அளவில் முதல் 10 பல்கலைக்கழகங்கள் என்ற இடத்திலிருந்து நூறாவது இடத்திற்கு சென்று விட்டதாக ஆளுநர் பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் அமைச்சர் பொன்முடி. இது குறித்து பேசியிருக்கும் அவர் திராவிட ஆட்சியில் தான் கல்வி வளர்ந்தது என்றும் புதுமைப்பெண் திட்டம் வந்த பிறகு உயர்கல்வியில் 29 சதவீதம் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்ததாகவும் தெரிவித்தார். இனி வரும் கல்வி ஆண்டுகளில் இந்த விகிதம் மேலும் அதிகரிக்கும் எனவும் கூறினார். இந்தியாவில் இருக்கக்கூடிய தலைசிறந்த 100 கல்லூரிகளில் 18 கல்லூரிகள் தமிழகத்தைச் சேர்ந்தவை என குறிப்பிட்டு காட்டினார் பொன்முடி.

சென்னை பல்கலைக்கழகம் இந்தியாவில் இருக்கக்கூடிய சிறந்த 10 பல்கலைக்கழகங்களிலிருந்து 100-வது இடத்திற்கு சென்று விட்டதாக ஆளுநர் கூறுவது முற்றிலும் தவறு என சுட்டிக்காட்டி அவர்  பன்னிரண்டாவது இடத்தில் இருப்பதாக தெரிவித்தார் . மேலும் இந்தியாவில் இருக்கக்கூடிய சிறந்த கல்லூரிகளில்  சென்னை பிரசிடென்சி காலேஜ் மூன்றாவது இடத்தில் இருப்பதையும் சுட்டிக்காட்டி பேசி இருக்கிறார் . மேலும் ஆளுநர்  யுபிஎஸ்சி மாணவர்களை அழைத்து  சனாதான தர்மத்தை பற்றி பேசக்கூடாது எனவும்  மேலும் அவர் சரியான தரவுகளை  சேகரித்து வைத்து பேச வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார் .

ஆளுநர் பதவி என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவி அல்ல என்றும்  ஒன்றிய அரசின் ஊதுகோலாக செயல்பட வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார் . மாநில அரசு சொல்வதை  செய்வதுதான் ஆளுநரின் கடமை எனவும் கூறியிருக்கிறார் பொன்முடி . மேலும் திராவிடம் ஆடல் ஆட்சி தமிழகத்தில் வந்த பிறகு சனாதானம்  காலாவதி  ஆகிவிட்டது . இனி காலாவதி ஆக வேண்டியது ஆளுநர் பதவி தான்  என ஆளுநருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் பொன்முடி


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Ponmudi reply to Tamil Nadu Governor is the post of Governor that should expire


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->