இங்கு இட்லி, தோசை சுட்டு கொண்டு இருக்கிறார்கள் அண்ணே., நாக்கை சரியாக.., திமுக அமைச்சருக்கு பதிலடி கொடுத்த பாடகர்.! - Seithipunal
Seithipunal


இந்தி பேசுபவர்கள் பானிபூரி விற்கிறார்கள் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கோரியதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், 'இங்கு இட்லி, தோசை சுட்டு கொண்டு இருக்கிறார்கள் அண்ணே.,' என்று பாடகர் ஒருவர் திமுக அமைச்சர் பொன்முடியை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய பொன்முடி, ஹிந்தியை விட ஆங்கிலம் என்பது மதிப்புமிக்கது. இந்தி பேசுபவர்கள் பாணி பூரி வீரப்பனை செய்கின்றனர் என்று அவர் சொல்லியதாக சர்ச்சை கிளம்பியது.

இதுகுறித்து தமிழக செய்தி ஊடகங்கள் சிலவும், வட இந்திய ஊடகங்களும் செய்தி வெளியிட்டு இருந்தன. 

இந்நிலையில், வடஇந்திய பாடகர் ஒருவர் திமுக அமைச்சரை டேக் செய்து அவருக்கு பதிலளித்துள்ளார்.

அவரின் முதல் பதிவில், பானிபூரி ஒன்றும் கீழே கிடைக்கவில்லை. தனி விமானத்தில் பயணம் செய்யும் ஒருவர் உண்ணும் அளவுக்கு அது பிரபலமானது, சுவை மிக்கது, முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்லியுள்ளார்.

அடுத்த பதிவில், "தமிழ் மிகவும் வளமான மற்றும் வளர்ந்த மொழி.அத்தகைய மொழிக்குடும்பத்தில் நாங்களும் நீங்களும் அங்கம் வகிப்பதில் நீங்கள் பெருமை கொள்ள வேண்டும். 

பொன்முடி அண்ணே., எங்கள் பகுதிகளில் இட்லி தோசை செய்யும் தென்னக சகோதரர்களை "அண்ணா" என்று நேசிப்போம், மதிக்கிறோம் அண்ணா.. நாக்கை சரியாக வைத்தால் உங்கள் ருசியும் நன்றாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

minister ponmudi hindi issue


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->