சட்டசபையில் பேப்பர்களை தூக்கி எறிந்துவிட்டு வெளியேறிய நிதியமைச்சர் பிடிஆர்.! ஈபிஎஸ் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


ஓபிஎஸ் தெரிவித்த கருத்துக்கு நிதியமைச்சர் பதில் தரவில்லை என்று, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இருந்து இன்று வெளியேறிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, எடப்பாடி கே பழனிசாமி தெரிவிக்கையில்,

"சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், பத்தாண்டு காலம் நிதி அமைச்சராக பணியாற்றியவரும், தமிழகத்தின் முதலமைச்சராக பணியாற்றியவருமான அண்ணன் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் நிதிநிலை அறிக்கை குறித்து கருத்துக்களை தெரிவித்து கொண்டிருக்கும்போது, திட்டமிட்டு நிதியமைச்சர் திடீரென்று அவையில் இருந்து வெளியேறி விட்டார்.

அவர் அண்ணன் ஓபிஎஸ் அவர்களின் கருத்துக்களை கேட்டு விட்டு, பதிலை அளிப்பது தான் மரபு. ஆனால் அதற்கு மாறாக அவருடைய துறையை சேர்ந்த நிதிநிலை அறிக்கையை அறிக்கை குறித்து பேசிக் கொண்டிருக்கும்போது வெளியேறியது அவையில் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதாலும், வேண்டுமென்றே திட்டமிட்டு அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது வெளியேறியது எதிர்க்கட்சிகளை அவமானப்படுத்துவதாக கருதி நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.

நிதியமைச்சர் வெளியேறும்போது அண்ணன் அவர்கள் கேட்ட கேள்விக்கு முறையாக பதிலளிக்க முடியாமல், அவர் கையில் வைத்திருந்த கோப்புகளை தூக்கி எறிந்து விட்டு வெளியேறினார். 

அவருடைய துறை., அவர் முறையாக அமர்ந்து பதிலளிக்க வேண்டும்., அதுவும் பட்ஜெட் என்பது இந்த நாட்டினுடைய வரவு செலவு திட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கூடிய விவாதம். அதில் பிரதான எதிர்க்கட்சி பேசி கொண்டு இருக்கும் போது, அதற்கு முதல் முறையாக பதிலளிக்க வேண்டிய கடமை நிதி அமைச்சருக்கு உள்ளது" என்று எடப்பாடி கே பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister palanivel thiyakarajan out in assembly


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->