நீட் தேர்வு இல்லாமலேயே மாணவர்கள் மருத்துவப் பட்டம் - அமைச்சர் ம சுப்பிரமணியன் பேட்டி.! - Seithipunal
Seithipunal


நீட் நுழைவு தேர்வு முறை மட்டுமே ஒருவரை தகுதியுள்ள மாணவராக மாற்றாது என்றும், நீட் தேர்வு இல்லாமலேயே மாணவர்கள் மருத்துவப் பட்டம் பெற்றுள்ளனர் என்றும், சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மா சுப்பிரமணியன் அவர்கள், விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில்,

"ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரிகள் இன்றைக்கு 186 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்று இருக்கிறது. 250 மாணவ மாணவியர்கள் நீட் தேர்வு வருவதற்கு முந்தைய ஆண்டு கல்லூரிகளில் சேர்ந்து, இன்றைக்கு இறுதி ஆண்டை முடித்து பட்டம் பெறுகின்றனர்.

இதில் பல்வேறு மாணவர்கள் பல துறைகளில் சிறந்து விளங்கியதாக பாராட்டுச் சான்றிதழ்களையும், பதக்கங்களையும் பெற்றிருக்கிறார்கள். நீட் நுழைவு தேர்வு முறை மட்டுமே ஒருவரை தகுதியுள்ள மாணவராக மாற்றாது. நீட் தேர்வு இல்லாமலேயே மாணவர்கள் மருத்துவப் பட்டம் பெற்றுள்ளனர்" என்று அமைச்சர் சுப்பிரமணியன் அந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

minister ma subramaniyan say about neet exam june 2022


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->