'அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் விரைவில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவார்கள்'; அமைச்சர் கோவி.செழியன் ..! - Seithipunal
Seithipunal


உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் அடுத்து அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் விரைவில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவார்கள் என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது அவர் கூறியதாவது: 

தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்தில், மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது என்று குறிப்பிட்ட கோவி.செழியன், அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் விரைவில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவார்கள் மற்றும், இதற்கான நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்வார் என்று அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, தமிழக பல்​கலைக்​கழகங்களுக்கு துணைவேந்​தர்​களை நியமிக்​கும் மசோ​தாக்​களை ஆளுநர் கிடப்​பில் வைத்திருந்ததை அடுத்​து, உச்ச நீதி​மன்​றம் தனக்குரிய அதி​காரத்​தைப் பயன்படுத்தி அந்த மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் வழங்கியுள்ளது. இதை எதிர்த்து பாளை​யங்கோட்​டையைச் சேர்ந்த பாஜக வழக்​கறிஞர் கே.வெங்​க​டாச்சலபதி சென்னை உயர் நீதி​மன்றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். இந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், வி.லட்​சுமி நாராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, துணைவேந்​தர்​களை நியமிக்க இடைக்​கால தடை விதித்​தது.

இந்த தடையை நீக்​கக் கோரி​, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்ள இந்த விசா​ரணையை உச்ச நீதி​மன்​றத்​துக்கு மாற்​றக் கோரி​தமிழக அரசு தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறையீடு செய்​யப்​பட்​டது. குறித்த மனுவை உச்ச நீதி​மன்​றம் தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்வுக்கு முன் நேற்று விசா​ரித்​தது.

அப்போது அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்​ட பிறகு, துணைவேந்​தர் நியமன சட்​டத்​துக்கு சென்னை உயர் நீதி​மன்​றம் விதித்த இடைக்​கால தடையை ரத்து செய்துள்ளது. மேலும் நிலு​வை​யில்​ உள்​ள மனுவை 06 ​வாரங்​களுக்​குள்​ வி​சா​ரிக்​க​வும்​, இந்​த வழக்​கு தொடர்​​பாக ஏற்​கெனவே தெரி​வித்​த கருத்​துகளை கேட்க​வும்​ உத்​தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Kovi Sezhiyan said that Vice Chancellors will be appointed to all universities soon


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->