அமைச்சர் எ.வ. வேலுவின் வெற்றிக்கு எதிரான தவெக வழக்கு தள்ளுபடி...! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எ.வ. வேலுவின் வெற்றியை எதிர்த்து தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் அருள் ஆறுமுகம் தொடர்ந்த தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.நடந்து முடிந்த 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எ.வ. வேலு, 2,455 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

அவரை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அருள் ஆறுமுகம் போட்டியிட்டார். தேர்தல் முடிவை எதிர்த்து, எ.வ. வேலுவின் வெற்றியை ரத்து செய்யக் கோரி அருள் ஆறுமுகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தேவையான காரணங்கள் இல்லை என்று தெரிவித்து, வழக்கை நிராகரிக்க வேண்டும் என எ.வ. வேலு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி. பரதசக்கரவர்த்தி, தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிப்பதற்கு உரிய காரணம் இல்லை எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, அருள் ஆறுமுகம் தாக்கல் செய்திருந்த தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.இதற்கு முன்பாகவும் பல்வேறு அரசியல் பிரமுகர்களின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அந்த வகையில், தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா, பெருந்துறை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் பதவியை ராஜினாமா செய்த ஜெயக்குமார், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன், கோவை தெற்கு தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி ஆகியோருக்கு எதிரான தேர்தல் வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister EV Velu victory case dismissed Madras High Court orders action


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->