வதந்தியை நம்பவேண்டாம்..அமைச்சர் பதவியிவிலிருந்து விலகவில்லை - சுரேஷ் கோபி! - Seithipunal
Seithipunal


அமைச்சராக இருக்க தனக்கு விருப்பம் இல்லை எனவும் நான் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன் என அமைச்சர் சுரேஷ் கோபி கூறியதாக தகவல் வெளியான நிலையில், அந்தத் தகவலை திருச்சூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மறுத்துள்ளார்.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று கடந்த மார்ச் 16ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து ஜூன் நான்காம் தேதி மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியானது.

கேரளா பாஜக வரலாற்றில் முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து நடிகர் சுரேஷ்கோபி வெற்றி பெற்றார். கேரளாவில் கால் பதித்த பாஜகவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி 3வது முறையாக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். 71 மத்திய அமைச்சர்களும் பதவி ஏற்று கொண்டார்கள். அதில் கேரளாவில் திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற நடிகர் சுரேஷ் கோபியும் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் இன்று காலை நடிகர் சுரேஷ் கோபி, அமைச்சர் பதவியில் இருந்து விளக்குவதாகவும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க விரும்பதாகும் கூறியதாக தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் அமைச்சர் பதவியிவிலிருந்து விளக்குவதாக பரவும் தகவல் தவறானது என சுரேஷ்கோபி விளக்கம் அளித்துள்ளார். நடிகர் சுரேஷ் கோபி கூறுகையில், மோடி தலைமையிலான அமைச்சரவையில் இருந்து விலகவில்லை. மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்று இருப்பது தமக்கு கிடைத்த கௌரவம். மோடியின் தலைமையின் கீழ் கேரளாவில் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்று நடிகர் சுரேஷ்கோபி கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister did not resign Suresh Gopi


கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?Advertisement

கருத்துக் கணிப்பு

இந்திய அணியின் பயிற்சியாளாராக கவுதம் கம்பீர் தேர்வு சரியானதா?
Seithipunal
--> -->