தைலாபுரத்தில் திடீர் சந்திப்பு! டாக்டர் ராமதாசுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் அழைப்பு!  - Seithipunal
Seithipunal


இப்தார் நோன்பு திறப்பில் பங்கேற்க முதலமைச்சர், துணை முதலமைச்சர் சார்பில், பாமக நிறுவனர்  டாக்டர் ராமதாசுக்கு, அமைச்சர் சி.வி.சண்முகம் அழைப்பு விடுத்தார். 

பாமக தலைமை நிலைய செய்தி குறிப்பில், "பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை சட்டத்துறை அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளருமான சி.வி.சண்முகம் அவர்கள் இன்று இரவு சந்தித்தார்.  அதிமுக சார்பில் சென்னையில் ஜூன் 3-ஆம் தேதி மாலை சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறவுள்ள இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்ளும்படி முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான  எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம்  ஆகியோர் சார்பில் அழைப்பு விடுத்தார். அதற்கான அழைப்பிதழையும் மருத்துவர் அய்யா அவர்களிடம் அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார். 

முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவர் அய்யா அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு  இப்தார் நோன்பு திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். மருத்துவர் அய்யா அவர்களும் அழைப்பை ஏற்றுக் கொண்டு நோன்பு திறப்பு நிகழ்வில் பங்கேற்க  ஒப்புக்கொண்டார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister cv shanmugam meet with dr ramadoss in thailapuram


கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
Seithipunal