தலைமைச் செயலகத்தில் மெகா மீட்டிங்...! கலெக்டர்கள், காவலாள்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் போடப்போகும் அதிரடி உத்தரவு என்ன...? - Seithipunal
Seithipunal


த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், நிர்வாக செயல்பாடுகளை தீவிரமாக ஆய்வு செய்யும் வகையில் முதல்-அமைச்சர் விஜய், சென்னை தலைமைச் செயலகத்தில் இரண்டு நாள் உயர்மட்ட அதிகாரிகள் மாநாட்டை கூட்டியுள்ளார்.வரும் 29 மற்றும் 30-ஆம் தேதிகளில் நடைபெற உள்ள இந்த மாநாடு, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், காவலர் கண்காணிப்பாளர்கள், சரக டி.ஐ.ஜி.க்கள், ஐ.ஜி.க்கள் மற்றும் வனத்துறை உயரதிகாரிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்த மாநாட்டை 3 முக்கிய அமர்வுகளாக பிரித்து நடத்த முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

முதல் அமர்வில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து பங்கேற்கின்றனர். இதில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து விரிவான ஆய்வு நடைபெற உள்ளது.காவல்துறை நிர்வாகத்தின் பொறுப்புணர்வு, வெளிப்படைத்தன்மை, உளவுத் தகவல் சேகரிப்பு, பிடி ஆணைகள் செயல்படுத்தல், தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுவோர், ரவுடிகள் மற்றும் ஜாமீனில் உள்ளவர்களை கண்காணித்தல் உள்ளிட்ட அம்சங்கள் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன.

அதேபோல், சாதி மோதல்கள் மற்றும் சமூக அமைதிக்கு சவாலாக இருக்கும் பிரச்சினைகள் குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.பெண்கள் பாதுகாப்பு, சிங்கப்பெண் அதிரடிப்படை செயல்பாடுகள், போக்சோ வழக்குகளின் நிலை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் ஆகியவை முக்கிய விவாதப் பொருள்களாக இடம்பெறுகின்றன.

அடுத்த கட்டமாக “போதை இல்லா தமிழகம்” என்ற தலைப்பில் சிறப்பு ஆய்வு நடைபெறுகிறது. கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் விழிப்புணர்வு, கள்ளச்சாராய ஒழிப்பு, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தடுப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

இரண்டாவது அமர்வில் மாவட்ட ஆட்சியர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். அனைத்து துறைகளின் மக்கள் நலத் திட்டங்கள் பொதுமக்களை முழுமையாக சென்றடைந்துள்ளதா, செயல்பாட்டில் உள்ள தடைகள் என்ன என்பன குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.மூன்றாவது அமர்வில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இணைந்து பங்கேற்று பல்வேறு நிர்வாக அம்சங்கள் குறித்து ஆலோசிக்கின்றனர்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த உயர்மட்ட மாநாட்டின் நிறைவில் முதல்-அமைச்சர் விஜய் உரையாற்ற உள்ளார். அப்போது சிறப்பாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை அலுவலர்களை பாராட்டி விருதுகளும் வழங்கப்பட உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

meeting Secretariat What drastic orders that Chief Minister Vijay going issue Collectors and Police Officers


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->