தோசை மதிமாறன்...! பாஜகவை ரகசியமாககூட... பா ரஞ்சித் vs திமுக - அனல் பறக்கும் வாக்குவாதம்!
Mathimaran vs Pa Ranjith supporter
வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக ஆதரவு அரசியல் நிலைப்பாடு மாறுமா? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் பா.ரஞ்சித், "பிரச்சனையின் அடிப்படையில் நாம் சில கேள்விகளை கேட்கிறோம்.
ஆனால், பிரச்சனைகளை தீர்த்து வைக்காத, தீர்த்து வைக்க முயலாத, தீர்த்து வைப்பதற்கான காரணங்களை ஆராயததால் நாம் நிச்சயமாக நமது முடிவையும் மாற்ற வேண்டிய தேவை இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், இது ஒரு எச்சரிகை தான்" என்று தெரிவித்து இருந்தார்.
இதற்க்கு திமுகவின் ஆதரவாளர் மதிமாறன் தனது சமூக வலைதளப்பாக்கத்தில், "சிறப்பு, திமுக எதிர்ப்பை பகிரங்கமா சொல்லும்போதுதான் இவர் திமுகவை ஆதரித்த ரகசியமே நமக்குத் தெரியுது.
இதுல விஷேசம் என்னன்னா.. இவர் பாஜகவை ரகசியமாககூட எதிர்த்ததில்லை என்பதுதான் இதில் குறியீடாக இருக்கும் சிம்பாளிக் ஷாட்" என்று பதிவிட்டிருந்தார். இவரைப்போலவே இன்னும் சிலர் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம், உங்கள் ஆதரவு & வாக்கு எங்களுக்கு தேவையில்லை என்றும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், பா. ரஞ்சித்தின் ஆதரவாளர் ஒருவர் மதிமாறனுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில், "திமுக அரசை விமர்சிப்பவர்கள் எல்லாம் பாஜக காரன் என முத்திரை குத்துவதே திமுக அல்லக்கைகளின் வேலை
மதிமாறன் பார்த்துக்கோ 2019 ல் CAA எதிர்ப்பு போராட்டத்தில் பாஜக வை எதிர்த்து ரஞ்சித் பேசியது.. இதுபோல் நிறைய இருக்கு..
புதிய கல்வி கொள்கையை தேர்தலில் எதிர்த்துவிட்டு மறைமுகமாக அமல்படுத்தி வருவது ரஞ்சித் அல்ல
மதிமாறன், அவர் ஒன்னும் உன்னை மாதிரி அறிவாலயம் கிட்ட கையேந்தி போஜனம் பண்ணல.. உழைச்சு சாப்பிடுறார். அதனால் கேள்வி கேட்கத்தான் செய்வார்.
பா.ரஞ்சித் திமுக வுக்கு ஓட்டு போட்டதே எனக்கு தெரியாது - தோசை மதிமாறன்
பழைய செய்தி: இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தேன் - பா.ரஞ்சித்
யோவ் தோசை, இப்போ உன் முகத்தௌ எங்க கொண்டு போய் வைச்சுப்ப?
1921ல் பனகல் அரசரின் நீதிக்கட்சியரசு அரசு வேலைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டினை வழங்கியது. ஆனால், பட்டியல் பிரிவு மக்களுக்கு எந்தவொரு சலுகையும் தரப்படவில்லை. இதனால் பட்டியல் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
English Summary
Mathimaran vs Pa Ranjith supporter