அரசியலில் பரபரப்பு.! காவல் ஆணையரிடம் மேலும் ஒரு புகார்! சீமானை சுத்து போடும் மாதர் சங்கம்! - Seithipunal
Seithipunal


நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்ததாகவும் திடீரென 2013 ஆம் ஆண்டு கழல் விழி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

இந்த விவகாரம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே சமாதான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. 

இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்தார். அந்த புகாரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தியதாகவும், அப்போது தன்னை கட்டாயப்படுத்தி 7 முறை கருகலைப்பு செய்ததாகவும் குற்றம் சாட்டை இருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி காவல்துறையினர் முன்னிலையும், திருவள்ளூர் மாவட்ட நீதிபதி முன்னிலையிலும் ஆஜராகி வாக்குமூலம் அழைத்தார். மேலும் அவருக்கு கட்டாய கருகலைப்பு செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அதற்கான மருத்துவ பரிசோதனை நேற்று முன்தினம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.

நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று முடிந்த நிலையில் வளசரவாக்கம் காவல்துறையினர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை இன்று நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். ஆனால் பல்வேறு கட்சி பணிக்காக வெளியூர் செல்வதைக் காரணம் காட்டி இன்று சீமான் ஆஜராகவில்லை. அதற்கு பதிலாக வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நேரில் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் மனுவில் நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜயலட்சுமி சார்பில் புகார் மனு வழங்கப்பட்டுள்ள நிலையில் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mathar Sangam filed complaint in Chennai Police against Seeman


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->