2016 மக்கள் நல கூட்டணிக்கு பின்னால் பல ரகசியங்கள் உள்ளன... மல்லை சத்யா போட்ட அரசியல் அணுகுண்டு! - Seithipunal
Seithipunal



மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கும், கட்சியின் முதன்மைச் செயலர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், மல்லை சத்யா கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி வைகோ அவரை நிரந்தரமாக நீக்கினார்.

இந்தச் சூழலில், மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, வரும் நவம்பர் 20-ஆம் தேதி சென்னையில் புதிய கட்சியைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாகச் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மல்லை சத்யா, "தான் திராவிட இயக்கக் கருத்தியலில் இருந்து பின்வாங்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன்" என்று தெரிவித்தார்.

மேலும், அரசியல் ரீதியான விமர்சனத்தைப் பதிவு செய்த அவர், "கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி உருவானதில் பல ரகசியங்கள் இருக்கின்றன. அந்த ரகசியங்களை இப்போது என்னால் சொல்ல முடியாது" என்று கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய கட்சி தொடங்குவது குறித்து அவர் பேசுகையில், நவம்பர் 20-ஆம் தேதி கட்சி தொடங்கப்படும் என்றும், கட்சியின் பெயரை முடிவு செய்யப் புலவர் செவந்தியப்பன் தலைமையில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மல்லை சத்யா தெரிவித்தார். இந்த புதிய கட்சி, தமிழக அரசியலில் எந்தத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

 Mallai Sathya MDMK 2016 makkal nala koottani DMK


கருத்துக் கணிப்பு

பிஹார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

பிஹார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்குமா?




Seithipunal
--> -->