மதுரை விமான நிலையத்துக்கு பாண்டிய மன்னன் பெயர் தான் வேண்டும்...! – சீமான் அதிரடி எச்சரிக்கை!
Madurai Airport should be named after Pandya king Seeman warns action
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் கூற்றுக்கு, கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், தினகரன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்தபோது,"ஒருவர் தேவர் பெயர் வேண்டும் என்பார்கள்; மற்றவர் இமானுவேல் சேகரன் பெயர் வேண்டும் என்பார்கள்.
ஆனால் எங்கள் நிலைப்பாடு தெளிவு – எந்த தாத்தா பெயரும் வேண்டாம்! எங்களுக்கு வரலாற்று பெருமை உள்ளது. தலையாலங்கானத்து பாண்டியன் நெடுஞ்செழியன் பெயரை வைத்தால் யாரும் எதிர்க்க மாட்டார்கள்.
கண்ணகி சிலம்பை உடைத்தபோது நீதியை நிலைநாட்டிய மன்னன் அவர் தான்.அந்த பெயர் வைக்காவிட்டால் நான் போராடுவேன்; என் ஆட்சி வந்தால் கண்டிப்பாக நெடுஞ்செழியன் பெயரையே வைப்பேன்,” என்று சீமான் அதிரடி எச்சரிக்கை விடுத்தார்.
English Summary
Madurai Airport should be named after Pandya king Seeman warns action