காதல் திருமணம் செய்வது கடினம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
Love marriage difficult Udhayanidhi speech
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதாவின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், காதல் திருமணம் குறித்துப் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
உதயநிதியின் பேச்சு
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தபோதிலும், இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு வந்ததாகக் குறிப்பிட்ட அவர், மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும்போது, காதல் திருமணம் குறித்துப் பேசினார்:
"இங்கு வந்தபோதுதான் இது காதல் திருமணம் என்று கூறினார்கள். பெற்றோர்கள் பார்த்துத் திருமணம் செய்துவைப்பது சிறப்பான நிகழ்ச்சிதான். ஆனால், அதைவிடக் கடினம் காதல் திருமணம்," என்று அவர் தெரிவித்தார்.
சமூகத் தடைகள்: காதல் திருமணம் எளிது என்று பலர் நினைப்பார்கள், ஆனால் அது மிகவும் கடினம் என்று கூறிய உதயநிதி, அதற்குக் காரணங்களையும் விளக்கினார்:
முதலில் இருவரும் காதலை வெளிப்படுத்தி, ஒருவரையொருவர் ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும். பின்னர் இருவரின் பெற்றோர்களையும் சம்மதிக்க வைக்க வேண்டும். அதன்பிறகு சொந்தக்காரர்கள், பல்வேறு தரப்பிலிருந்தும் பிரச்சினைகளும், தடைகளும் வரும்.
அனைத்துத் தடைகளையும் மீறித்தான் இன்று இங்கு ஒரு காதல் திருமணம் நடந்துகொண்டிருக்கிறது. அதனால் மணமக்களுக்குச் ஸ்பெஷல் வாழ்த்துகள்," என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
English Summary
Love marriage difficult Udhayanidhi speech