சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் இசை விழா! - இடம் மாற்றம், ரசிகர்கள் உற்சாகம்!
Music festival Sivakarthikeyan Parasakthi Venue changed fans excited
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘பராசக்தி’ தற்போது திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வருகிறது. இப்படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படம், இந்தி திணிப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 14, 2026 அன்று ‘பராசக்தி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக படக்குழு தீவிரமாக தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.மேலும், படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஜனவரி 4, 2026 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க இருப்பதாக முடிவு செய்யப்பட்டிருந்தாலும், புதிய திட்டமிட்ட மாற்றத்தின் படி விழாவை தற்போது திருச்சி அல்லது மதுரை பகுதியில் நடத்தப்படுவதாக படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Music festival Sivakarthikeyan Parasakthi Venue changed fans excited