ஆதிக்கத்தை விரட்ட அறிவுத் தீபம் ஏந்துவோம்: திருவள்ளுவர் நாளில் ஆதவ் அர்ஜுனா...!
Let us hold lamp knowledge drive away oppression Adhav Arjuna Thiruvalluvar Day
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,"அறம், பொருள், இன்பம் என்ற மூவகை வாழ்வியல் தத்துவங்களால் மனிதகுலத்திற்கு வழிகாட்டியவர் திருவள்ளுவர்.

உலக உயிர்களுக்கிடையே கடைபிடிக்க வேண்டிய உயரிய அறநெறிகளையும், மானுடம் மகத்தான பாதையில் நடைபோடத் தேவைப்படும் கடமைகளையும், ஒவ்வொரு மனிதனும் கொண்டாட வேண்டிய இன்ப வாழ்க்கையையும் ஒருங்கே கற்றுத்தந்த தமிழ் மண்ணின் ஆதியோன் அவர்.
அத்தகைய திருவள்ளுவரின் பெருமையைப் போற்றும் திருவள்ளுவர் நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
மொழி, பண்பாடு, அரசியல் என பல தளங்களில் ஆதிக்க மனப்பாங்கு நம்மைச் சூழ்ந்திருக்கும் இக்காலகட்டத்தில், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவச் சிந்தனையை உயிர்ப்புடன் ஏந்தி முன்னேறுவோம்.
சமத்துவம், சமய நல்லிணக்கம், சமூகநீதி ஆகியவை தான் சமூகத்தின் உண்மையான ஒளிவிளக்குகள் என்பதை உணர்ந்து, ஆதிக்கத்தையும் அநீதியையும் எதிர்த்து நிற்கும் உறுதியை அறிவுத்திருநாளான இன்றே எடுத்துக்கொள்வோம்" இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
English Summary
Let us hold lamp knowledge drive away oppression Adhav Arjuna Thiruvalluvar Day