விடிவெள்ளி வி.பி. சிங் அவர்களின் புகழை நாளும் போற்றுவோம்! - பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்
Let us celebrate glory of VP Singh every day Stalin wishes him on his birthday
சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிட்டதாவது,"இந்திய நிலப்பரப்பில் மண்டிக்கிடந்த ஆதிக்க இருள் அகற்றிட, சமூகநீதி எனும் பேரொளியைத் தூக்கிச் சுமந்த விடிவெள்ளி 'சமூகநீதிக் காவலர்' வி.பி.சிங் அவர்களின் புகழை நாளும் போற்றுவோம்!
ஆதிக்கத்துக்கு எதிரான போராட்ட வரலாற்றைத் திரிபுகளால் மாற்றுவது மீண்டும் அடிமைத்தனத்துக்கே வழியமைக்கும் முயற்சி என்பதை இளம் தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம்! " என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அரசியல் தலைவர்கள் பலர் வி.பி.சிங் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Let us celebrate glory of VP Singh every day Stalin wishes him on his birthday