ஆளுநரிடம் பேசி நீட் தேர்வை ரத்து செய்ய சொல்லுங்கள்.. நடிகர் ரஜினிக்கு கே.எஸ் அழகிரி கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


தமிழக மக்கள் மீது நடிகர் ரஜினிக்கு உண்மையிலேயே அன்பு இருந்தால் நீட் தேர்வை ரத்து செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார்.

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தமிழக ஆளுநர் ஆர் எம் ரவி அவர்களை சந்தித்ததாகவும் அரசியல் குறித்து பேசியதாகவும் தெரிவித்திருந்தார். அவருடைய இந்த சந்திப்பு பல அரசியல் கட்சி தலைவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் தமிழக மக்கள் மீது ரஜினிக்கு உண்மையான அன்பு இருந்தால் ஆளுநர் ஆர்.என் ரவியுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத்தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நீட்தேர்வு காரணமாக நமது குழந்தைகள் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

KS Alagiri speech about Rajinikanth meet Governor


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->