அமைச்சர் சேகர்பாபுவுக்கு 'ஷாக்'...! வழக்கை ரத்து செய்ய உய்ரநீதிமன்றம் மறுத்ததால் பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


சேகர்பாபு மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.தமிழ்நாடு சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது சென்னை துறைமுகம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளராக போட்டியிட்ட சினோரா அசோக் தனது தேர்தல் பணிமனையில் இருந்தார்.

அந்த நேரத்தில் அங்கு வந்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், சினோரா அசோக் மற்றும் த.வெ.க. தொண்டர்களை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சேகர்பாபு உள்ளிட்டோருக்கு எதிராக காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சேகர்பாபு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.இந்த விசாரணையின்போது சேகர்பாபு தரப்பில், சம்பவம் நடந்ததாக கூறப்படும் நாளிலிருந்து 29 நாட்கள் கழித்து, அதாவது புதிய அரசு பொறுப்பேற்ற பிறகே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.

மேலும், புகாரில் குறிப்பிடப்பட்டபடி எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்பதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.ஆனால் இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கை ரத்து செய்வதற்கான போதுமான முகாந்திரம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

இதனால் மனு தள்ளுபடி செய்யப்படலாம் என்ற நிலை உருவானதைத் தொடர்ந்து, சேகர்பாபு தரப்பில் மனுவை வாபஸ் பெற அனுமதி கோரப்பட்டது.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவை திரும்பப் பெற அனுமதி வழங்கி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Shekar Babu shock There stir High Court refuses quash case


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->