மருத்துவமனைகளில் மரணம் நடப்பது, கவனக்குறைவு இருப்பது இயல்பு தான் - கேஎஸ் அழகிரி சர்ச்சை பேச்சு! - Seithipunal
Seithipunal


அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கால் பந்து வீரர்களை பிரியா பலியான நிலையில், மருத்துவமனைகளில் மரணம் நடப்பது இயல்பு தான் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள இந்திரா காந்தி உருவ சிலைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவிக்கையில், "மருத்துவமனைகளில் மரணம் நடப்பது இயல்பு தான். கவனக்குறைவு இருப்பது இயல்பு தான். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

ஆளும் திமுக அரசின் கூட்டணி கட்சி என்பதால் விட்டு கொடுக்காமல் பேசுவதாக நினைத்து, நடந்த சம்பவம் இயல்பானது எனும் தோணியில், அலட்சியமாக கேஎஸ் அழகிரி பேசி இருப்பது சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.


மேலும் ஒரு அண்மைய செய்தி : இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் ஐரோப்பிய நாடுகளில் இருப்பது போன்ற அறுவை சிகிச்சை தணிக்கை செய்யப்பட இருக்கிறது.

சென்னையில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் வருடாந்திர தேசிய கருத்தரங்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், "கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு ஏற்பட்டது போன்ற தவறு இனி நடக்காமல் இருக்க வரும் 23ம் தேதி மருத்துவ நிபுணர்களை அழைத்து ஐரோப்பிய நாடுகளில் இருப்பது போன்ற அறுவை சிகிச்சை தணிக்கை செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் முதல் முறையாக இது செய்யப்பட இருக்கிறது" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KS Alagiri Say About Priya Death issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->