ஆர்.கே நகரில் திமுக டெபாசிட் இழந்தது.. அரசியல் ரீதியில் வெற்றி தான்..! - கே.பி முனுசாமி..!! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் "ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. 

இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் தோல்வி அடைந்தாலும் அரசியல் ரீதியாக நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். ஆளுங்கட்சியினர் 20க்கும் மேற்பட்ட அமைச்சர்களைக் கொண்டு ஈரோடு தொகுதியில் தேர்தல் பரப்புரை செய்து வெற்றி பெற்றுள்ளனர்.

ஆனால் அதிமுக எந்த சலசலப்பும் இன்றி போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் வலுவான எதிர்க்கட்சி அதிமுக தான் என்று மீண்டும் நிரூபித்துள்ளோம். 

அந்த வகையில் அரசியல் ரீதியாக இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எந்த வேலையும் இல்லை. எனவே இபிஎஸ்-ஓபிஎஸ் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் தான் அதிமுக தோல்வி அடைந்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது அவருடைய தனிப்பட்ட கருத்து.

தமிழகத்தின் வலுவான எதிர்க்கட்சி அதிமுக தான் என்பதை நிரூபித்துள்ளோம். அடுத்து வரும் தேர்தலிலும் எங்கள் தலைமையிலான கூட்டணியில் தான் தேர்தலில் போட்டியிடுவார்கள். கடந்த 2017 ஆம் ஆண்டு ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் திமுக போட்டியிட்டு டெபாசிட் இழந்தது. 

ஆனால் நாங்கள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளோம். ஈரோடு கிழக்கு வெற்றி ஒருபோதும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்காது. இது ஒரு தொகுதிக்காக மட்டுமே நடக்கக்கூடிய தேர்தல். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெறும். எனவே இந்த தேர்தலின் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்காது" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

KP Munusamy said It is a political victory for AIADMK


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->