#தமிழகம் || கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியவனை அடித்து வெளுத்து வாங்கிய பெண் ஜெயா.! போலீசார் பொதுமக்கள் பாராட்டு.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியை சேர்ந்த குருமூர்த்தி - ஜெயா  தம்பதி கோவை மாவட்டம்,. சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி பகுதியில் வசித்து வருகின்றனர்.

குருமூர்த்தி பாப்பம்பட்டி பல்லடம் நெடுஞ்சாலையில் டீ கடை ஒன்றை நடத்தி வருகிறார். காலையில் டீக்கடைக்கு சென்று விடுவதால் ஜெயா மட்டும் வீட்டில் தனியாக இருப்பது வழக்கம்.

சம்பவம் நடந்த நேற்றும் ஜெயா மட்டுமே வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டின் அருகே நின்ற ஒரு லாரியின் டிரைவர், ஜெயாவிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். பின்னர் ஜெயாவின் வீட்டிற்கு வந்து உப்பு வேண்டும் என்று ஜெயாவிடம் கேட்டுள்ளார்.

ஜெயா உப்பு எடுப்பதற்காக வீட்டிற்குள் சென்ற போது, அவரை பின்தொடர்ந்து சென்ற அந்த டிரைவர், திடீரென கத்தியை எடுத்து ஜெயாவின் கழுத்தில் வைத்து மிரட்டியுள்ளார்.

முதலில் அதிர்ச்சியான ஜெயா, பின்னர் சுதாரித்து கொண்டு, தனது ஒரு கையால் லாரி டிரைவரின் கத்தி வைத்திருந்த கையைப் பிடித்துக் கொண்டு, மற்றொரு கையால், லாரி டிரைவரை சரமாரியாக வெளுத்து வாங்கியுள்ளார்.

வலி தாங்க முடியாமல் கத்தியையும், தனது செல்போன், லாரியையும் அங்கேயே விட்டுவிட்டு லாரி டிரைவர் தப்பியோடி உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக தனது கணவருக்கு ஜெயா தகவல் தெரிவிக்கவே, பின்னர் இருவரும் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த சமத்துவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், லாரி டிரைவர் விட்டு சென்ற செல்போன், கத்தி மற்றும் லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வருகிறார்கள். ஜெயாவை மிரட்டி நகை, பணம் நோக்கில் டிரைவர் செயல்பட்டாரா அல்லது எதற்காக மிரட்டினார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பொருட்களை ஏற்றுவதற்காக பல பகுதிகளில் இருந்து லாரிகள் வந்து செல்கின்றன. இதனால் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற லாரி டிரைவர்களிடமும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியவனை, அடித்து ஓடவிட்ட வீரபெண் ஜெயாவை போலீசாரும், அந்த பகுதி மக்களும் பாராட்டி வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kovai soolur Young brave women


கருத்துக் கணிப்பு

டி20 உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும்?Advertisement

கருத்துக் கணிப்பு

டி20 உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும்?
Seithipunal