கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை!
kovai college girl abused
கோவை விமான நிலையத்தின் பின்புறப் பகுதியில் நடந்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவி, மூன்று இளைஞர்களால் தாக்கப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளானதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தகவலின்படி, அந்த மூவரும் மாணவியின் நண்பரை தாக்கி அங்கிருந்து விரட்டியபின், மாணவியை பலவந்தமாக அழைத்துச் சென்று வன்கொடுமை செய்துள்ளனர்.
சம்பவத்துக்குப் பிறகு, மாணவி கடுமையாக காயமடைந்த நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு போலீசாரால் அனுப்பி வைக்கப்பட்டார்.
போலீசார் மாணவியின் வாக்குமூலத்தை பதிவு செய்து, குற்றவாளிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தப்பியோடிய மூன்று இளைஞர்களையும் பிடிக்க சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் தடய அறிவியல் நிபுணர்கள் சான்றுகள் சேகரித்து வருகின்றனர்.
கோவையில் இச்சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போலீசார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
kovai college girl abused